கடலில் மிதந்துவந்த மர்ம மூட்டை.. திறந்து பார்த்த கடலோர காவல் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

கடலில் மிதந்துவந்த மர்ம மூட்டை.. திறந்து பார்த்த கடலோர காவல் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..


Anti depressant bottles smuggled from India to sri lanka

தங்கச்சிமடம் வடக்கு கடல் பகுதியில் சந்தேகத்தின் பேரில் கடலில் மிதந்துவந்த மூட்டை ஒன்றை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகளிலிருந்து கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்றவற்றை இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தும் சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் தற்போது அந்த கடத்தல் பட்டியலில் சமையலுக்கு பயன்படும் விரலி மஞ்சளும் இடம்பிடித்துள்ளது.

இலங்கையில் உள்நாட்டு விவசாய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இந்தியாவில் இருந்து மஞ்சளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச்செல்கிறது ஒருசில கடத்தல் கும்பல்.

இந்நிலையில் நேற்று காலை தங்கச்சிமடம் வடக்கு கடல் பகுதியில் சந்தேகப்படும் வகையில் மூட்டை ஒன்று கடலில் மிதப்பதாக அதை பார்த்தவர்கள் இந்திய கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற காவல் படையினர் கடலில் மிதந்த சாக்கு மூட்டையை மீட்டு சோதனை செய்தனர்.

சோதனையின் போது அந்த மூட்டைக்குள் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நோய் வைட்டமின் B1, B6, B12 + Calcium Pantothenate எனப்படும் ஊசிமருந்துகளை கொண்ட சுமார் 10,000 குப்பிகள் இருந்துள்ளன. இதுகுறித்து தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திச்செல்லும் போது இந்த மூட்டை தவறி கடலில் விழுந்திருக்கலாம் எனவும், இதனை கடத்தியவர்கள் யார் என விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.