#Breaking: பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசா? மத்திய அரசா? - அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!



Annamalai on New Airport Chennai

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஏகனாபுரம் உட்பட 11 கிராம மக்களை இன்று நேரில் சந்தித்து பேசி இருந்தார். அப்போது, விமான நிலையம் வேண்டும், பரந்தூரில் வேண்டாம். வேறு எங்காவது தரிசு நிலத்தில் அமைத்துக்கொள்ளுங்கள் என கூறி இருந்தார்.

மாநில அரசே இடம் தேர்வு செய்யும்

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, "சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும். டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் என அந்நகரில் அமைந்துள்ள விமான நிலையங்கள் 4000 ஏக்கர் நிலத்திற்கு மேல் அமைந்துள்ளது. விமான நிலையத்திற்கு தேவையான இடம் மாநில அரசால் தேர்வு செய்யப்படுகிறது. 

இதையும் படிங்க: #Breaking: முக ஸ்டாலின் ஆட்சியை காப்பாற்றிக்கொடுத்த அண்ணாமலை? - பரபரப்பு பேட்டி.!

annamalai

பரந்தூரை பரிந்துரைத்ததே மாநில அரசுதான்

கடந்த 2019ல் அதிமுக ஆட்சியில், மாநில அரசு பரந்தூர், மாமந்தூர் பகுதியில் இடத்தை தேர்வு செய்து பரிந்துரை வழங்கியது. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் பரந்தூர், பன்னூர் ஆகிய பகுதிகளை திமுக அரசு பரிந்துரை செய்தது. இறுதியில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

அரசு மக்களிடம் பேசாமல் செய்தது தவறு

மத்திய அரசு விமான நிலையத்தை வடிவமைக்க முயற்சி செய்கிறது. மத்திய அரசு ரூ.20000 கோடி பங்கீடுடன் விமான நிலையம் கட்டப்படும். திமுக, அதிமுக என இரண்டு அரசு கொடுத்த பட்டியலில் பரந்தூர் இருந்தது. அதனால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. மாநில அரசு மக்களிடம் பேசி இருக்க வேண்டும். மக்களின் ஒப்புதலுக்கு பின் செய்திருக்க வேண்டியதை, திமுக அரசு செய்யவில்லை என்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது" என கூறினார்.

இதையும் படிங்க: டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், நடனமாடும் திமுக? - அண்ணாமலை அதிர்ச்சி தகவல்.!