வேலை தேடிய இளம் பெண்... ஆசை வார்த்தை கூறி... காப்பாற்றிய காவல்துறை .!

வேலை தேடிய இளம் பெண்... ஆசை வார்த்தை கூறி... காப்பாற்றிய காவல்துறை .!


an-young-woman-who-was-kidnapped-and-forces-to-do-prost

சென்னையில் வேலை தேடி அலைந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். அப்போது ரோந்து பணியிலிருந்த போலீசாரிடம் அவர்கள் சிக்கியுள்ளனர். அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் தப்பி ஓட இரண்டு பேரை மட்டும் காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையின் கொரட்டூர் பகுதியைச் சார்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் பல இடங்களிலும் வேலை தேடியலைந்திருக்கிறார். அப்போது பெரியபாளையம் பகுதியில் அவர் வேலை தேடிக் கொண்டிருந்தபோது இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணிடம் வேலை தருகிறோம் என்று கூறியுள்ளனர். வீட்டு வேலை செய்ய வேண்டும் என்று கூறி விடுதிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

chennai

விடுதிக்குச் சென்றவுடன் மௌலி, கார்த்திக் ஆகிய இளைஞர்களுடன் குகன் என்பவரும் இணைந்து இருக்கிறார். பின்னரும் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் விபச்சார தொழிலில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என கூறி உள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மறுக்கவே கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

பின்னர் மூன்று இளைஞர்களும் சேர்ந்து அந்த பெண்ணை வெளியே அழைத்துச் சென்று இருக்கின்றனர். அப்போது காவல்துறையினரின் ரோந்து வாகனம் வந்த பகுதியில் சென்றிருக்கிறது. இதனைக் கண்ட அந்த பெண் இவர்களிடம் இருந்து தப்பிச் சென்று காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறார். காவல்துறையினரும் அந்த பெண்ணை மீட்டதோடு அவரைக் கடத்தி வந்த இளைஞர்களை துரத்தி பிடித்துள்ளனர். மூன்று இளைஞர்களில் மௌலி என்ற இளைஞர் தப்பி சென்று விட்டார். கார்த்திக் மற்றும் குகன் ஆகியோரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மௌலியை தீவிரமாக தேடி வருகின்றனர்.