அரசியல் தமிழகம்

ஆம்பூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திடீர் மரணம்!

Summary:

Ambur former mla died

ஆம்பூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா (52) உடல்நலக்குறைவால் செவ்வாய்கிழமை அதிகாலை காலமானார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் அஸ்லம் பாஷா.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் இருந்து ஆம்பூர் பிரிக்கப்பட்டு ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் அஸ்லம் பாஷா.

ஆம்பூர் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கான முன்முயற்சியைச் செய்ததில் முக்கிய பங்கு ஆற்றியவர் அஸ்லம் பாஷா ஆவார். இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அஸ்லம் பாஷாவின் மறைவிற்கு இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement