தமிழகம்

ஆம்புலன்ஸை காக்க வைத்து விட்டு பக்கோடா வாங்க சென்ற 65 வயது கொரோனா நோயாளி..!

Summary:

Ambulancesai kaka vaithu vittu bakoda vanka sinra sambavam

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக தென்காசியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதுவரை தென்காசியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி பழைய மார்க்கெட் பகுதியான சிதம்பர வினாயகர் கோவில் தெருவை சேர்ந்த வயதான முதியவர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த முதியவருக்கு கொரோனா தொற்று   இருப்பது உறுதியாகியுள்ளது. 

அதனை அடுத்து சுகாதர துறையினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் அந்த முதியவரை அழைத்து வர சென்றுள்ளனர். அப்போது அந்த முதியவர் ஆம்புலன்ஸை வெயிட் செய்ய வைத்து விட்டு அருகில் இருந்த பேக்கரிக்கு சென்று ஒரு பெரிய பாக்கெட் பக்கோடா வாங்கி வந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

    


Advertisement