
Ajith sujith
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
அதனை அடுத்து கடந்த ஐந்து நாட்களாக நடைப்பெற்ற மீட்பு பணியானது 80 மணி நேரங்கள் கடந்ததை அடுத்து மீட்பு பணி தோல்வியில் முடிவடைந்துள்ளது. குழந்தையானது அழுகிய நிலையில் குழியிலிருந்து எடுக்கப்பட்டு பின் இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது தல அஜீத் அவர்கள் முதன் முறையாக அதை பற்றி பேசியுள்ளார். நம் நாட்டில் தொழில்நுட்ப வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த மாதிரி பிரச்சனைக்கு நம் நாட்டில் யாரும் கருவியை கண்டுப்பிடிக்கவில்லை. மேலும் சுஜித்தின் இறப்பே இறுதியாக இருக்கட்டும். இதற்கு பிறகாவது யாருக்கும் அப்படி நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இனி மேலாவது ஆழ்துளை கிணறுகள் மூடப்பட வேண்டும். இல்லை என்றால் மூடாமல் இருப்பவர்களுக்கு கொலை முயற்சி வழக்கு போட வேண்டும் என்று மன வேதனையுடன் நடிகர் அஜித் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement