அதிமுக அதிரடி....127 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி! அதிமுக கோட்டையில் சூடு பிடிக்கும் தேர்தல் பணி!!!
தமிழகத்தில் தேர்தல் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய கட்சிகள் தங்களது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், அதிமுக வெளியிட்டுள்ள புதிய வேட்பாளர் பட்டியல், மாநில அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் கட்ட பட்டியல் வெளியீடு
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். ஏற்கனவே முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது ஒரே நேரத்தில் 127 பேர் கொண்ட பெரிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 150 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி தீவிர கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இது தேர்தலை முன்னிட்டு கட்சியின் திட்டமிட்ட அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: அடி தூள்... மீண்டும் களமிறங்கும் அந்த முக்கிய புள்ளி...! எடப்பாடியின் திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம்!!!
பழையவர்களும் புதுமுகங்களும் இணைப்பு
இந்த 127 பேர் கொண்ட பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் புதுமுகங்கள் ஆகியோருக்கு சமநிலையான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கட்சியின் அனுபவத்தையும் புதிய தலைமுறையையும் இணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், இந்த அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. வரவிருக்கும் தேர்தலில் கட்சி தனது பலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரண்டாவது பட்டியல்.
– மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.#TNElections2026#Vote4AIADMK #EPSfor2026 pic.twitter.com/wtEHyylHld
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) March 27, 2026
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) March 27, 2026
இதையும் படிங்க: திடீர் திருப்பம்!அதிமுகவுடன் கூட்டணி... நிபந்தனையின்றி ஆதரவு அறிவித்த கட்சிகள்! அனல்பறக்கும் அரசியல் கலம்!!!