மீண்டும் ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை! தொடர்ந்து போலீசாரின் தற்கொலைக்கு முக்கிய காரணம் என்ன?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார் புரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். 49வயது நிறம்பிய இவர் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் அலெக்சாண்டர் நேற்று காலை 8 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டு, தூங்கச் செல்வதாக கூறி அறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திற்க்காததால் சந்தேகமடைந்த மனைவி, அருகிலுள்ளவர்களை அழைத்து கதவை உடைத்து, பார்த்த போது தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார் அலெக்சாண்டர்.
அலெக்சாண்டர் தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அலெக்சாண்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், கடந்த 31ஆம் தேதி காலை காவல் நிலைய அணிவகுப்பில் கலந்து கொள்ளாததால் தன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். போலீசாரின் தற்கொலைக்கு முக்கிய காரணம் என்னவென்று அலெக்ஸாண்டரின் உறவினர்கள் காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்நது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.