அரசியல் தமிழகம்

தொடர்ந்து 2 நாட்களாக 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்! கடும் சோகத்தில் திமுகவினர்!

Summary:

Again Dmk MLA died

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் காத்தவராயன். இவர் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில், போட்டியிட்டு  வெற்றி பெற்றார். திருமணம் செய்து கொள்ளாத நிலையில் தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.


எம்.எல்.ஏ காத்தவராயனுக்கு இதயநோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் போதிய பலன் அளிக்காததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்து கடந்த மாதம் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டார். கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், அடுத்த நாளே மற்றொரு எம்.எல்.ஏ காலமாகி இருப்பது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழக சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 98ஆக குறைந்துள்ளது. 


Advertisement