ரஜினி, கமல், விஜயை ஓரங்கட்டி தல அஜித்தை புகழ்ந்து தள்ளும் அதிமுக அமைச்சர்கள்! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம் சினிமா

ரஜினி, கமல், விஜயை ஓரங்கட்டி தல அஜித்தை புகழ்ந்து தள்ளும் அதிமுக அமைச்சர்கள்!


சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தல அஜித்தை புகழ்ந்த நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் அஜித் கண்ணியமானவர் என்றும், தொழில் பக்தி மிக்கவர் என்றும் புகழ்ந்து இருக்கின்றார்.

நடிகர் கமல்ஹாசனின் 60ஆண்டு திரைப்பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவேன் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார். அன்றும் அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடந்துள்ளது, நாளையும் அதிசயம் நடக்கும், என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரஜினி, கமல், விஜய்தான் அரசியலுக்கு வரவேண்டுமா? எங்க தல அஜித் வரக்கூடாதா? எனவே அதிமுகவிற்கு விசுவாசமாக உள்ள நட்சத்திரங்களை கூட நாங்கள் களமிறக்குவோம் எனத் தெரிவித்தார். 

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணிக்கு முன்பு ரஜினி, கமல் கூட்டணி எல்லாம் தூள் தூளாகி விடும். கமல், ரஜினி, விஜய் அனைவரும் வெறும் பிம்பங்கள்.

 நடிகர் அஜித்குமார் ஒரு நாகரீகமான, மிகவும் பண்பான மனிதர். தன்னுடைய தொழில் மீது மட்டும் கவனம் செலுத்தி வரும் உயர்ந்த மனிதர். இந்தநிலையில், நடிகர் அஜித் குறித்து அரசியல் தலைவர்கள் பல கருத்துகள் முன் வைத்தாலும், தல அஜித் தரப்பில் இருந்து எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.


 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo