
மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் கட்சி என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை குஷ்பு.
மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் கட்சி என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை குஷ்பு.
நடிகை குஷ்பு பாஜகவில் சேர இருப்பதாக செய்திகள் வெளியானநிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று காலை குஷ்பு நீக்கப்பட்டார். இதனை அடுத்து நேற்றைய தினமே அவர் டெல்லி சென்று பா.ஜ.கவில் சேர்ந்தார். இந்நிலையில் குஷ்பு டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய அவருக்கு பாஜகவினர் விமனநிலையத்தில் உற்சாக வரவேற்பளித்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் பாஜகாவில் சேர்வதற்கு காரணமான அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்காக 6 ஆண்டுகள் தனது நேரத்தையும் கடும் உழைப்பையும் கொடுத்ததாக கூறிய குஷ்பு, சிந்திக்கிற மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளதாக கடுமையாக விமர்சித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியினர் தன்னை பற்றி தவறாக பேசுவதால் தானும் பதிலடி கொடுப்பதாக கூறினார் குஷ்பு.
Advertisement
Advertisement