கொரோனாவிற்கு எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை இது தான்! நடிகர் விஷால் வெளியிட்ட வைரல் வீடியோ!

கொரோனாவிற்கு எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை இது தான்! நடிகர் விஷால் வெளியிட்ட வைரல் வீடியோ!



actor vishal talk about corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை, அவரின் மேலாளர் ஆகியோருக்கு கடந்த 20 தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், கொரோனா அனுபவம் குறித்த தகவலை அவரது ட்விட்டர் பக்கத்திலும் வீடியோவாக பதிவிட்டுள்ளார். 

அவரது ட்விட்டர் பதிவில், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியது எனது கட்டாயம். எனது அப்பாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அவரை வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தோம். அவருக்கு உதவி செய்ததால், எனக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து என்னுடைய மேலாளர் ஹரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, நாங்கள் ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவம் எடுத்து ஒரு வாரத்தில் நாங்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தோம். நான், ஆயுர்வேதிக் மருத்துவத்துக்கு விளம்பரம் செய்வதற்காக இதனை சொல்லவில்லை. உண்மையிலேயே அது பலனளித்தது. கொரோனா வந்தாலும் பயப்படக் கூடாது. எங்க அப்பாவுக்கு 82 வயது. அவர் பயப்படாமல் இருந்தார். கொரோனாவிற்கு பயப்படாமல் இருப்பது தான் சிறந்த மாத்திரை. அந்த மாத்திரை தான் என்னையும் அவரையும் கொரோனாவிலிருந்து மீட்டது.

நான் எல்லோருக்கும் சொல்வது கொரோனா தொற்று ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் பயப்படாதீர்கள். பயம்தான் நிறைய பேரை இக்கட்டான சூழலுக்கு கொண்டு போய் உள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடுவேன் என்ற மன தைரியத்தில் ஆயுர்வேத மாத்திரை சாப்பிட்டால் சரியாகிடும் என தெரிவித்துள்ளார்.