தமிழகம் Covid-19

தந்தைக்கு கொரோனா.. தனக்கும் அறிகுறி.. நடிகர் விஷாலின் டிவீட்டால் ஆடிப்போன ரசிகர்கள்!

Summary:

Actor vishal confirms corono to his father

தனது தந்தைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்றும் தனக்கும் தனது மேலாளருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் உச்சத்தை அடைந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலமானவர்கள் வரை பாரபட்சமின்றி கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷாலுக்கும் அவரது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம், உண்மைதான், என்னுடைய அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் எனக்கும் அதிக ஜுரம், சளி, இருமல் இருந்தது. என் மேலாளருக்கும் அப்படியே.

நாங்கள் அனைவரும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டோம். ஒரே வாரத்தில் ஆபத்திலிருந்து வெளியே வந்தோம். தற்போது நாங்கள் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் உள்ளோம்" என பதிவிட்டுள்ளார். 


Advertisement