என்ன சொல்றீங்க!! நானா!! ஓட்டுப்போட சென்ற நடிகர் ஸ்ரீமனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..Actor sriman faced issue before cast his vote

நேற்றுநடந்த வாக்கு பதிவின் போது, வாக்களிக்க சென்ற பிரபல நடிகர் ஸ்ரீமனுக்கு வாக்களிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்தநிலையில், தமிழகமே தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதில், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

sriman

இந்நிலையில், தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவு செய்வதற்காக பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீமன் அவர்கள் கோடம்பாக்கம் வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு போஸ்டல் ஓட்டு அனுப்பட்பட்டுள்ளதாகவும், எனவே நேரடியாக வந்து வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீமன், அதுபோன்ற எந்த ஒரு போஸ்ட்டல் ஓட்டுக்கும் தான் விண்ணப்பிக்கவில்லை எனவும், தன்னை வாக்களிக்க அனுமதிக்கும்படியும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். சிறிது நேர விவாத்திற்கு பிறகு, அதிகாரிகள் நடிகர் ஸ்ரீமனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கினார். பின்னர் தனது வாக்கினை பதிவு செய்து, தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார் நடிகர் ஸ்ரீமன்.