அதெல்லாம் சரி.. கேரளாவில் வேலைக்கு போக அது எதுக்குங்க.? நடிகர் சத்யராஜின் பளீச் கேள்வியால் பரபரப்பு.!actor-sathyaraj-talk-in-book-released-function

அண்மையில் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பத்திரிகையாளர் திருமாவேலன் என்பவர் எழுதிய "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" என்ற புத்தக அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நடிகர் சத்யராஜ் சிறப்புரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, திராவிட இயக்கம்தான் தமிழ் மொழிப் பற்றை தனக்குள் வைத்தது. 

தந்தை பெரியார் தமிழ் மற்றும் ஆங்கில மொழியை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஏனெனில் ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளாமல் விட்டால் ஹிந்தி உள்ளே புகுந்துவிடும். வேலை காரணமாக எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்குள்ள மொழியை கற்றுக்கொள்ளலாம்.

Sathyaraj

 வட மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றால் சொல்லவே தேவையில்லை இந்தியை கற்றுக் கொள்வோம். ஆனால் கேரளாவிற்கு வேலைக்கு செல்பவர்கள் ஏன் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெரியார் குறித்தும் நடிகர் சத்யராஜ் பல கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.