பட்டபகலில் நடந்த பதறவைக்கும் சம்பவம்... அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்த பக்தர் பலி...

பட்டபகலில் நடந்த பதறவைக்கும் சம்பவம்... அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்த பக்தர் பலி...


accidently-one-man-died-in-madurai

மதுரையில் அம்மனுக்கு காய்ச்சிய கூழில் தவறி விழுந்து பக்தர் ஒருவர் பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சி வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

madurai

அந்த அம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் அன்பளிப்பாக தந்த பொருட்களை வைத்து ஆடி மாத கூழ் காய்ச்சி வைத்துள்ளனர். அப்போது முத்துக்குமார் என்கின்ற முருகனுக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு வந்ததால் நிலைதடுமாறி கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 65 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.