தமிழகம்

சாலையில் தலைகுப்புற விழுந்த 108 ஆம்புலன்ஸ்.! திடீர் தீவிபத்து..! நூலிழையில் உயிர்தப்பிய நிறைமாத கர்ப்பிணி.

Summary:

Accident niraimatha karpini 108 ambulance

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவரின் மனைவி சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்ப்படவே அவரின் கணவர் விஜயகாந்த் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

ஆனால் சந்திராவின் பிரசவத்தில் சிக்கல் ஏற்ப்படவே அவரை உடனே திருச்சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அதனை அடுத்து அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலம் சந்திராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஒரு கார் ஆம்புலன்ஸின் மீது மோதுவது போல் வந்தததை அடுத்து 108 ஆம்புலன்ஸ் சாலையில் தலைக்குப்புற விழுந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சந்திராவுக்கு எதுவும் ஆகவில்லை. 

அதனை அடுத்து வேறு ஒரு ஆம்புலன்ஸை வரவழைக்கப்பட்டு சந்திராவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஆம்புலன்ஸை மற்றொரு வாகனத்தின் உதவியுடன் எடுத்து செல்ல முயன்றுள்ளனர். 

அப்போது திடீரென ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்துள்ளது.அதையடுத்து ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர். 

இதற்கிடையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்திராவுக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 


Advertisement