ஏ.சி. பொருத்தும்போது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த ஏ.சி. மெக்கானிக்! சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு! தவிக்கும் 9 மாத குழந்தை!
சென்னையை அடுத்த மேடவாக்கத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் இவரின் வயது 29. ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரியும் இவர் திருமணமான நிலையில் மனைவி மற்றும் 9 மாத குழந்தையுடன் வசித்துவந்துள்ளார். இந்தநிலையில் ராஜசேகரன், நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் 7-வது மாடியில் ஏ.சி. எந்திரம் பொருத்தும் பணிக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலின் ஜன்னலுக்கு வெளிப்புறம் நின்று கொண்டு ஏ.சி. எந்திரம் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
அவர் 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜசேகரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மேடவாக்கம் சோமு நகரில் ராஜசேகரன் வீட்டில் இருந்த அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தனது கணவன் இறந்த சோகத்தில் திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார் ராஜசேகரனின் மனைவி. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ராஜசேகரனின் மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.