திருமணமான 2 வாரத்தில் புது மணப்பெண் கடத்தல்: விருத்தாசலம் அருகே பரபரப்பு..!

திருமணமான 2 வாரத்தில் புது மணப்பெண் கடத்தல்: விருத்தாசலம் அருகே பரபரப்பு..!


Abduction of new bride within 2 weeks of marriage creates excitement near Vridthachalam

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள பெரியகண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி விஜயராணி (40). இந்த தம்பதியினரின் மகள் அன்புக்கரசி (21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சம்பவத்தன்று இரவு அன்புக்கரசி, தனது தாய் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலையில் விஜயராணி எழுந்து பார்த்த போது, அன்புக்கரசியை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த விஜயராணி மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அன்புக்கரசி கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து விஜயராணி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் திருமணமான எனது மகளை சின்னபண்டாரங் குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், அவரது தந்தை சுந்தரம், செந்தமிழ்செல்வன், வீரமணி ஆகியோருடன் சேர்ந்து கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின் அடிப்படையில் வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்தூறையினர், அவர்களையும், கடத்தப்பட்ட புதுப்பெண்ணையும் தேடி வருகின்றனர். திருமணமான 2 வாரத்தில் புதுப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.