ஆதார் கார்டில் மாற்றம் செய்யும் முன் உஷார்.. பலருக்கும் தெரியாத UIDAI விதிகள்.!
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை சரியாக வைத்திருப்பது அரசு சேவைகள் பெற மிகவும் அவசியம். பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி மாற்றம் செய்ய UIDAI சில விதிமுறைகளை நிர்ணயித்துள்ளது. அவை என்ன? என்பதை இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Aadhaar Update Rules: இந்தியாவில் மிக முக்கிய அடையாள அட்டையாக இருக்கும் ஆதார் 12 இலக்க எண்களைக் கொண்டதாகும். இதில் ஆதாரில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உட்பட அடிப்படை விவரங்கள் இடம் பெற்று இருக்கும். மேலும் பயோமெட்ரிக் முறையில் கைரேகை, கருவிழி ஆகியவையும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மூலமாக அரசு நலத்திட்டங்களை பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் என பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது.
தவறான விவரங்களால் சிக்கல்:
ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரியில் தவறு இருக்கும் பட்சத்தில் அரசு நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் அவற்றை முறையாக வைத்திருப்பது நல்லது. ஒரு சில முக்கிய விவரங்களில் திருத்தம் தேவைப்படும் பட்சத்தில் அதனை ஆதார் மையத்தில் செய்து கொள்ளலாம். இதற்கு சில கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
இதையும் படிங்க: திருமணத்திற்குப் பின் புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!

பெயர் மற்றும் பிறந்த தேதி மாற்றம்:
அதன்படி ஆதாரில் பெயரை இருமுறை மட்டுமே அப்டேட் செய்யலாம். இதற்காக வாக்காளர் அடையாள அட்டை, திருமண சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறந்த தேதியை நாம் ஒருமுறை மட்டுமே மாற்றிக் கொள்ள இயலும். அதே நேரத்தில் முகவரியை நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
முகவரி மாற்றம்:
முகவரியை உறுதி செய்ய தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம். இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணைய இணையதளத்தில் கட்டணம் செலுத்தி இவ்வாறான திருத்தங்களை செய்து கொள்ள முடியும். மேலும் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கும் சென்று திருத்தம் செய்யலாம்.