விவசாய வேலைக்கு சென்ற செவிலியர்: தாய் செய்த காரியத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்..!

விவசாய வேலைக்கு சென்ற செவிலியர்: தாய் செய்த காரியத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்..!


A young girl commits suicide by drinking poison because her mother scolded her

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினரின் மகள் தமிழரசி. இவர் நர்சிங் படித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் வேலையை விட்டு நின்றுள்ளார். 

இந்த நிலையில், தனது தாய் செல்வியுடன் விவசாய வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர் வேலையை சரியாக செய்யவில்லை என கூறி  செல்வி தமிழரசியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த நிலையில், தமிழரசி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த தமிழரசியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். இளம் பெண் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட தகவலை மருத்துவமனை நிர்வாகம் கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு அனுப்பியது.

தகவலறிந்த காவல்துறையினர், தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.