
A woman who has been abortion for 15 years
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆனந்தி என்ற பெண் தனது வீட்டில் அனுமதியின்றி ஸ்கேன் சென்டர் நடத்திவந்துள்ளார். இந்தியாவில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த நிலையில் இவர் சட்டவிரோதமாகக் கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிந்து, மேலும் ஸ்கேனில் பெண் சிசு என்றால் கருக்கலைப்பு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதே வேலையைத் தொடர்ந்ததால் 2016-ம் ஆண்டு மறுபடியும் கைது செய்யப்பட்டார். மீண்டும் ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தி, மீண்டும் கருக்கலைப்பு தொழிலை செய்து வந்துள்ளார்.
ஒரு நாளைக்கு 10 முதல் 20 பெண்கள் கருவைக் கலைக்க ஆனந்தியிடம் வந்துள்ளனர். இந்த நிலையில் ஆனந்தியைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement