குடும்பத் தகராறில் காதல் திருமணம் செய்த பெண் எடுத்த விபரீத முடிவு... கதறும் குடும்பத்தினர்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பவித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இம்மானுவேல் தனது குடும்பத்துடன் கோவை பீளமேடு பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனையில் பவித்ரா இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று இமானுவேல் வேலைக்கு சென்று விட்ட பிறகு பவித்ரா வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையில் வீட்டிற்கு வந்த இமானுவேல் பவித்ரா வாந்தி எடுப்பதைக் கண்டு விசாரித்துள்ளார். அப்போது தான் எலி மருந்தை சாப்பிட்டு விட்டதாக கூறி இருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இம்மானுவேல் பவித்ராவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மேலும் உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் பவித்ரா. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா உயிர் இழந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இதுகுறித்து பவித்ராவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்