'பெர்த் டே' பார்ட்டிக்கு ஹோட்டல் சென்ற குடும்பத்தினர்... வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி.. காவல்துறை விசாரணை.!a-shock-awaited-at-home-for-those-who-returned-from-the

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஹோட்டலுக்கு  சென்றவரின் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள முகமதுஷாபுரம்  பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனது மனைவி மகன் பால்பாண்டி மற்றும் மருமகள் புவனேஸ்வரி ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது மகன் பால்பாண்டி மதுரையில் கண் கண்ணாடி  கடை நடத்தி வருகிறார்.

tamilnaduநேற்று முன்தினம் பால்பாண்டிக்கு பிறந்தநாள் என்பதால் அவர் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார். பின்னர் வீடு திரும்பி வந்தபோது  வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

tamilnaduஇதனைத் தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இவர்களை நோட்டமிட்ட கும்பல் தான் இந்த  துணிகர செயலில் ஈடுபட்டுள்ளது என காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்தக் கொள்ளை சம்பவத்தில் அவரது வீட்டில் இருந்து 20 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு உள்ளது.