மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
ஆ.ராசா மனைவி உடல்நிலை கவலைக்கிடம்.! அதிர்ச்சியில் திமுகவினர்.!
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி, உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்களின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பிலிருந்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்த ராசாவின் மனைவி பரமேஸ்வரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். மருத்துவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்திருந்தார். மேலும் விரைவில் குணமாகி விடுவார் நம்பிக்கையாக இருங்கள் என அவர் ராசாவுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் அவரது உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பரமேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.