குட்டிநாய்க்கு பேருதவி செய்த காவல் அதிகாரி.. அந்த மனசு தான் சார் கடவுள்..!

குட்டிநாய்க்கு பேருதவி செய்த காவல் அதிகாரி.. அந்த மனசு தான் சார் கடவுள்..!


a Police Officer Helps Dog to Came out Form Sewage

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் முதல், தெருக்களில் சுற்றித்திரியும் விலங்குகள் வரை அவைகள் பெரும் பாசம் கொண்டவை. மனிதர்களால் தனக்கு தீங்கு இழைக்காத வரை, நாம் அன்பு செலுத்தவில்லை என்றாலும் அவைகள் நம் மீது அன்போடு இருக்கும். 

சில நேரங்களில் எதிர்பாராத விதமாக தெருக்களில் உள்ள நாய்கள் ஏதேனும் பள்ளங்களில் விழுந்து, மேலே எழுந்து வர இயலாமல் தவித்திற்கும். அதனை பலரும் கண்டும் காணாது செல்வார்கள். அப்படி ஒரு குட்டி நாய் சாக்கடையில் விழுந்துவிட்டு, மேலே வர இயலாமல் தவித்துள்ளது. 

இதனைக்கண்ட காவல் அதிகாரி ஒருவர், நாயருகே சென்று அதனை சாக்கடையில் இருந்து மேலே தூக்கி விடுகிறார். முதலில் மனிதர் வருகையை பார்த்ததும் பயத்துடன் நாய் இருந்தாலும், காவல் அதிகாரி கையை நீட்டியதும் தன்னை மேலே கொண்டு செல்ல உதவப்போகிறார் என்பதை உறுதி செய்து, தலையை தூக்கி காண்பிக்கிறது. உடனடியாக காவலரும் குட்டி நாயை வெளியே தூக்கி விடுகிறார். இந்த வீடியோ வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.