2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை... விசாரணையில் வெளிவந்த உண்மை.!

நாமக்கல் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெட்டுக்காட்டுபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு காதல் திருமணம் ஆகி திவித்(5), தர்ஷன்(3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தியில் இருந்த அந்த பெண தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில குடும்ப தகராறு காரணமாக அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்திருக்கிறது.