நள்ளிரவில் கடையில் ஏற்பட்ட தீ விபத்து.. வீட்டு உபயோக பொருட்கள் கருகி நாசமான சம்பவம்.!

நள்ளிரவில் கடையில் ஏற்பட்ட தீ விபத்து.. வீட்டு உபயோக பொருட்கள் கருகி நாசமான சம்பவம்.!


A fire broke out in the shop in the middle of the night.. Household appliances got burnt.

எட்டயபுரம் நடுவப்பட்டியில் சதீஷ்குமாா் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் விளாத்திகுளம் சாலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் வழக்கம் போல் வியாபாரம் முடித்துவிட்டு இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து நள்ளிரவில் சதீஷ்குமார் கடையிலிருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

fire accident

அதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து எட்டயபுரம் காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.