தமிழகம்

அலமாரியில் இருந்த டிவி தலையில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு! அதிர்ச்சி காரணம்!

Summary:

A 3-year-old child was died when a TV fell on his head

சென்னை சேலையூர் அடுத்த அகரம் தென் அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் பாலாஜி. இவர்  அலமாரியில் தொலைக்காட்சி பெட்டிக்கு அருகே அவரது செல்போனை சார்ஜ் போட்டு வைத்திருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. போனின் ரிங்க்டோன் கேட்டதும் 3 வயது குழந்தையான கவியரசு ஓடிச்சென்று செல்போனை எடுக்க முயற்சித்துள்ளார்.

பாலாஜியின் மகன் கவியரசு அவசரத்தில் அப்பாவின் போனை எடுத்தபோது எதிர்பாராத விதமாக சார்ஜ் வயரில் சிக்கி அருகில் இருந்த தொலைக்காட்சி பெட்டி குழந்தையின் தலையில் விழுந்துள்ளது. சத்தம்கேட்டு வெளியில் இருந்த கவியரசுவின் தந்தை பாலாஜி அலறியடித்து ஓடிவந்து கவியரசுவை மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

ஆனால் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைத்துள்ளனர். இதுதொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


Advertisement