வேளாங்கண்ணியில் பயங்கரம்... கொலையில் முடிந்த 96 பட சினிமா காதல்... கணவன், மனைவி கைது...

வேளாங்கண்ணியில் பயங்கரம்... கொலையில் முடிந்த 96 பட சினிமா காதல்... கணவன், மனைவி கைது...


96 movie love story incedent happened in vellankanni

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் தெரு அருகே உள்ள ஏஞ்சல் ரெசிடன்ஸி உரிமையாளர் வினோத் விக்டர் - மரிய ரூபினா மார்ட்டினா தம்பதியினர். விக்டர் கடந்த வெளிநாட்டுக்கு மாதம் 5 லட்சம் சம்பளத்திற்கு வேலை சென்ற நிலையில் தங்கும் விடுதியை மனைவியின் மூலம் அறிமுகமான திமுக பிரமுகர் மதன் கார்க்கியிடம் லீசுக்கு வீட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அடிக்கடி மதன் கார்க்கி மார்ட்டினாவை காண வீட்டுக்கு வருவதாக விக்டருக்கு நெருக்கமானவர்கள் விக்டரிடம் கூறியுள்ளனர். அதனையடுத்து விக்டர் மனைவிக்கு தெரியாமல் வைத்து சென்ற கேமராவிலும் பார்த்துள்ளார். இது குறித்து மனைவி மார்ட்டினாவிடம் கேட்டதற்கு விடுதி சம்பந்தமாக வந்து செல்வதாக கூறி சமாளித்துள்ளார்.

Vellankanni

இதனையடுத்து விடுதியை திரும்ப பெறும் நோக்குடன் தாயாகம் வந்த விக்டர் விடுதி சென்றுள்ளார். அங்கு மதன் கார்க்கி விடுதியை காலி மறுத்தது மட்டுமின்றி விக்டரையும் தாக்கியுள்ளார். பின்னர் சம்பவத்தன்று மனைவி மார்ட்டினாவுடன் விடுதிக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது மதன் கார்க்கி உட்பட 15 பேர் கொண்ட கும்பல் விக்டர் காரை தடுத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதில் கார் டிரைவர் ஓட்டம் பிடிக்கவே விக்டரே காரை ஓட்டியுள்ளார். ஆனால் மதன் கார்க்கி விக்டர் காரை விடாமல் துரத்தி சென்று தடுத்துள்ளார். தனது உயிரை காப்பாற்றி கொள்ள விக்டர் மதன் கார்க்கியையும் அவரது நண்பரையும் காரால் அடித்து தூக்கியுள்ளார்.

அதில் மதன் கார்க்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

Vellankanni

அதாவது மார்ட்டினாவும், மதன் கார்க்கியும் பள்ளிபருவம் முதலே காதலித்து வந்துள்ளனர். காதலனுடன் சேர்ந்து வாழும் எண்ணத்தில் விடுதியை லீசுக்கு கொடுக்க வைத்துள்ளார் மார்ட்டினா. ஆனால் கணவன் வைத்த கேமராவில் சிக்கியதை அடுத்து விக்டரை கொலை செய்யுமாறு மதன் கார்க்கியை ஏவியுள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக மதன் கார்க்கி உயிரிழந்தது போலீசார் விசாரணையில் வெளியாகியுள்ளது. அதனையடுத்து கொலை வழக்கில் விக்டரையும், கணவனை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மார்ட்டினாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.