அக்காவுடன் சண்டை.! அம்மா கண்டித்ததால் 7 ஆம் வகுப்பு மாணவி செய்த காரியம்! பேரதிர்ச்சி சம்பவம்.!



7-th-standard-girl-commits-suicide-for-fight-with-siste

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடி பகுதியில் வசித்து வருபவர் கனிமொழி. அவர் 3 மகள்கள் உள்ள நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கனிமொழி அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு செல்லும் போது அவரது மூத்த மகளுக்கும், 2வது மகளுக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. கனிமொழி இருவரையும் கண்டித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இதில் ஸ்ரீமதி மட்டும் கோபம் குறையாமல் அம்மாவிடம் பேசாமல் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஏழாம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீமதி மதியம் உணவு இடைவேளையின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். பதறிப்போன ஆசிரியர்கள் உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு செல்லும் வழியில் ஸ்ரீமதி  உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், ஸ்ரீமதி நெயில் பாலீஷ் மற்றும் அதனை ரிமூவ் செய்யும் தின்னரை குடித்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழாம் வகுப்பு மாணவி நெயில் பாலிஷ் குடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.