ஓடும் பேருந்திலேயே விபரீத முடிவெடுத்த முதியவர்.. லைட்டை போட்டதும் அலறிய பயணிகள்.! 



60-Year-Old Man Dies by Suicide on Moving Government Bus; Passengers Shocked in Tirunelveli

முதியவர் பேருந்து பயணத்தின்போதே தற்கொலை செய்துகொண்டது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

நாகர்கோவில் பேருந்து.. 

கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் ஷாஜி கிருஷ்ணன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவில் ஊட்டியில் இருந்து நாகர்கோயில் செல்லும் அரசுப்பேருந்தில் திருப்பூரில் இருந்து பயணம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: 4 பேர் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்.. சிதறி ஓடிய மக்கள்.. நெல்லையில் பயங்கரம்.! 

உடல்நலக்குறைவு: 

இவர்கள் நாகர்கோயில் செல்ல டிக்கெட் எடுத்த நிலையில், கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக இருமிக்கொண்டே வந்துள்ளார். இதர பயணிகள் இரவு நேரம் என்பதால் உறங்கிவிட்டனர். இதனிடையே, அதிகாலை சுமார் 05:30 மணியளவில் பேருந்து நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதிக்கு வந்துள்ளது. 

tirunelveli

அதிர்ச்சி.. 

அப்போது, பயணி ஒருவர் இறங்க பேருந்தை நிறுத்தி விளக்குகள் போடப்பட்டன. அப்போது, படுக்கையில் ஏறுவதற்கு அமைக்கப்பட்டு இருந்த கம்பியில் கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனால் பயணிகள் அலறிய நிலையில், பேருந்தின் ஓட்டுநர் & நடத்துனர்  பேருந்தை கங்கைகொண்டான் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.  

விசாரணை: 

அங்கு முதியவரின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 
 

 

 

இதையும் படிங்க: உயிரைப்பறித்த ஒருதலைக்காதல்.. இளம்பெண்ணின் முடிவால் கண்ணீரில் பெற்றோர்.!