தேர்தல் பிசி ஒருபக்கம், ஐபிஎல் பிசி ஒரு பக்கம்!. 6 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு நீதி கிடைக்குமா??



6-years-girl-murdered


கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 கடந்த 25-ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புதூர் என்ற இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது.

young girl

அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் செய்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு கோவையில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிறுமியின் பெற்றோர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்க படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.