6 வயது சிறுவனுக்கு இப்படி ஒரு கொடூர மரணமா? பூட்டிய காருக்குள் பயங்கரம்.. தஞ்சாவூரில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!
காருக்குள் மூச்சுத்திணறி 6 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் ஒரத்தநாட்டில் நடந்துள்ளது.
சிறுவன்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, கக்கரைக்கோட்டை, வடக்குநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் தனபால். இவரின் மகன் தமன் (வயது 6). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதனிடையே, நேற்று விடுமுறை நாள் என்பதால், சிறுவன் தனது பெரியப்பாவின் மகன் பிரவீன்குமாரின் காரில் சிறுவன் தமன் வெளியே சென்று இருக்கிறார்.
இதையும் படிங்க: 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை.. கண்மாயில் கிடந்த சடலம்.. சிவகங்கையில் திடுக்.!
அலறல்:
பின் வீட்டுக்கு வந்தபோது, அதே பகுதியில் காரை நிறுத்திய பிரவீன் குமார், அங்கிருந்து சென்றுள்ளார். காருக்குள் இருந்த சிறுவன் செய்வதறியாது திணறி காப்பாற்றக்கூறி அலறியுள்ளார். ஆனால், ஜன்னல் அடைக்கப்பட்டு இருந்ததால் வெளியே குரல் கேட்கவில்லை. சிறுவன் காரில் இருப்பது தெரியாமல் உறவினர்கள் அவனை தேடி அலைந்து இருக்கின்றனர்.

பெற்றோர் கண்ணீர்:
இறுதியில் இரவு நேரத்தில் காருக்குள் வந்து பார்த்தபோது, சிறுவன் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. இதனைக்கண்ட பெற்றோர் சிறுவனின் உடலை கட்டியணைத்து கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்போன் கொடுக்காத விரக்தியில் சிறுவன் எடுத்த முடிவு.. கண்ணீரில் பெற்றோர்.!