தமிழகம்

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற மனிதமிருகம்! நீதிமன்றம் அளித்த அதிரடி தண்டனை!

Summary:

6 year child raped persion got Hanging sentence

கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்த 1ம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் பெற்றோர்கள் ஊரின் பல இடங்களில் தேடியுள்ளனர். இன்னலையில் சிறுமி வீட்டின் பின்புறத்தில் மறுநாள் காலை துணியால், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்,  சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து மூச்சு திணறடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியின் வீட்டிற்கு எதிரே  மனைவியை  பிரிந்து வாழ்ந்துவந்த சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய படம்

இந்த வழக்கு கோவை மகளிர்  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்நிலையில் கோவையில் போக்கோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி வாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா சந்தோஷ்குமார்தான் குற்றவாளி என்பாதை உறுதி செய்து, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 கொலை செய்த்ததற்காக தூக்கு தண்டனையும், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும்,தடயத்தை மறைத்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து  தீர்ப்பு அளித்துள்ளார்.

மேலும் சிறுமியின் உடலில் மற்றொரு நபரின் விந்துவானது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த நபரையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டுமென சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


Advertisement