இது என்ன புது புரளியா இருக்கு!! 5G தொழில்நுட்பம்தான் கொரோனா பரவலுக்கு காரணமா?? தொலைத்தொடர்புத்துறை விளக்கம்
இது என்ன புது புரளியா இருக்கு!! 5G தொழில்நுட்பம்தான் கொரோனா பரவலுக்கு காரணமா?? தொலைத்தொடர்புத்துறை விளக்கம்

5 ஜி தொழிநுட்பதால்தான் கொரோனா பரவுகிறது என வதந்தி பரவியதை அடுத்து, அதுகுறித்தது விளக்கமளித்துள்ளது இந்திய தொலைத்தொடர்புத்துறை.
சீனாவில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்தியாவில் நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனா 2 வது அலை உச்சமடைந்துவிட்டதாகவும் சமீபத்தில் மத்திய அரசு தெரிவிதித்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 2 வது அலை தீவிரமாக பரவ, 5ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என தகவல் ஓன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்நிலையில் 5ஜி தொழிநுட்பத்துக்கும், கொரோனா பரவலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தொலைத்தொடர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. செல்போன் கோபுரங்களில் 5ஜி தொழில்நுட்ப சோதனை தொடர்பாக பரப்பப்படும் தகவல்கள் தவறானவை எனவும், இந்தியாவில் தற்போதுவரை 5ஜி தொழிநுட்ப சேவை சோதனை செய்யப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது.