அடுத்த அதிரடி திட்டம்!! இவர்களுக்கெல்லாம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அடுத்த அதிரடி அறிவிப்பு!!
அடுத்த அதிரடி திட்டம்!! இவர்களுக்கெல்லாம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அடுத்த அதிரடி அறிவிப்பு!!

தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து மக்களை கவர்ந்துவருகிறார் முதல்வர் ஸ்டாலின். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு என பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளார் முதல்வர்.
மேலும் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பல்வேறு புதிய திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
1. கொரோனா நிவாரணத்தின் 2-வது தகணையாக ரூ.2000 வழங்கும் திட்டம்.
2. 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டம்.
3. அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கும் திட்டம்.
4. கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்துக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
5. அரசு பேருந்தில் திருநங்கைகள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதி.
மேலும் காவல்துறையினர் பயன்பெறும் வகையில் ரூ.5000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2ம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 பேர் பயன்பெறுவார்கள்.