தமிழகம்

அடுத்தடுத்த சுருண்டு விழுந்து பலியான 50 காக்கைகள், 3 நாய்கள்..!பூம்புகாரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.

Summary:

50 crows 3 dogs standaly died in pumpukar

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவர் பகுதியில் கிட்டத்தட்ட 2000 மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மீனவர் காலனியில் கூட்டமாய் அமர்ந்து 50 காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. பின்னர் சிறிது நேரத்திலேயே காகங்கள் அனைத்து அடுத்தடுத்த சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளன. அதே நேரத்தில் அந்த பகுதியில் மூன்று நாய்களும் அடுத்தடுத்த உயிரிழந்துள்ளன.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காகங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டு வீட்டை சுற்றிலும் மஞ்சளை கரைத்து தெளித்தும், வேப்பிலையை வீட்டின் முன்பு கட்டியும் வைத்துள்ளனர். மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்திலும் சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளனர். 

அதனை அடுத்து போலீசார் காகங்கள் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் எதேனும் நோய் தொற்று ஏற்ப்பட்டுள்ளதா அல்லது யாரும் விஷம் வைத்து கொன்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 


Advertisement