கோவையில் கொரோனாவால் பாதித்த 10 மாத குழந்தை உட்பட 5பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!5 patient recover from corona

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த குழந்தை உட்பட 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 63 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 25 வயது மாணவி முதலாவதாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

corona

மேலும், திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர், போத்தனூர் ரயில் நிலைய மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர், அவரது 10 மாத குழந்தை மற்றும் மருத்துவரின் வீட்டில் பணி புரிந்த பெண் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

வீட்டிற்கு செல்லும் அவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு தனிமையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் மீதமுள்ள 58 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.