5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு! சற்று முன் காலஅட்டவணை வெளியீடு!

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு! சற்று முன் காலஅட்டவணை வெளியீடு!


5 and 8 standard exam timetable released

மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தலாம் என முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் இந்த நடைமுறையை அந்தந்த மாநில கல்வித்துறையே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்து இருந்தது. 

அதனை தொடர்ந்து மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தவும், அவர்களது திறமையை வளர்க்கவும் தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும் இந்த நடைமுறை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தது. மேலும் வினாக்கள் எளிமையானதாக இருக்கும் பெற்றோர்கள் யாரும் பயப்பட வேண்டாம். 3 ஆண்டுகளுக்கு பிறகே கடுமையான முறையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

public exam

இந்நிலையில் தற்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐந்தாம் வகுப்புகளுக்கான தேர்வு 2020 ஏப்ரல் 17ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் 5 ஆம் வகுப்பிற்கு ஏப்ரல்15 தமிழ், ஏப்ரல்17 ஆங்கிலம், மற்றும் ஏப்ரல்20 கணிதம் என மூன்று பாடங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. 

மேலும் எட்டாம் வகுப்புகளுக்கு மார்ச்30 தமிழ், ஏப்ரல்2 ஆங்கிலம், ஏப்ரல்8 கணிதம், ஏப்ரல்14 அறிவியல், ஏப்ரல்.17 சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளது மேலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற நோக்கத்திலேயே பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.