ப்பா.. செம்ம பெர்பாமன்ஸ்.. புல்லரித்து கைதட்டி ஆரவாரப்படுத்திய வெளிநாட்டினர்.. அசத்திய லிபியன் நாதஸ்வரம்.! 

ப்பா.. செம்ம பெர்பாமன்ஸ்.. புல்லரித்து கைதட்டி ஆரவாரப்படுத்திய வெளிநாட்டினர்.. அசத்திய லிபியன் நாதஸ்வரம்.! 



44 th Chess Olympic Chennai Function Lydian Nadhaswaram Performance

லிடியனின் பாடலை கேட்டு புல்லரித்துப்போன வெளிநாட்டு அதிகாரி, கைதட்டி ஆரவாரப்படுத்தி பாராட்டுகளை குவித்தது வரவேற்பை பெற்றுள்ளது.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், இந்தியாவிலேயே முதல் முறையாக இன்று நடைபெறுகிறது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு திறம்பட செய்துள்ளது. இந்நிகழ்வின் தொடக்க விழா சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் போது பரதநாட்டியம் உட்பட இந்தியா திருநாட்டின் 8 வகையான நடனம், லிடியன் நாதஸ்வரத்தின் பியானோ இசைக்கச்சேரி, மணல் சிற்பக்கலைஞர் சர்வம் படேலின் மணல் ஓவியம் போன்றவை வெளிநாட்டு வீரர்களிடையே காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வருகை தந்திருந்தார். 

இளம் இசைக்கலைஞரான லிடியன் நாதஸ்வரம் இரண்டு பியானோவை ஒரே நேரத்தில் இசைத்து காண்போர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், கண்களை கட்டிகொண்டவாறு பியானோ இசைப்பு, ஒரே நேரத்தில் ஹாரிபாட்டர் தீம் மற்றும் மிஸின் இம்பாஸிபிள் தீம் வாசிப்பது, பைரேட்ஸ் ஆப் கரீபியன், ஜெய் ஹோ பாடல் போன்றவற்றையும் இசைத்து இருந்தார். 

அப்போது, நிகழ்வில் இருந்த வெளிநாட்டை சார்ந்த செஸ் ஒலிம்பியாட் அதிகாரி, லிடியனின் பியானோ வாசிப்புக்கு மயங்கி தனது உடல்மொழி பாவனைகளை வெளிப்படுத்தி கைதட்டி ஆரவாரப்படுத்தி பாராட்டினார்.