தமிழகம் காதல் – உறவுகள்

நிச்சயதார்த்ததன்று மானங்கெட்ட மாப்பிளையின் மட்டமான செயல், தப்பித்து கொண்ட மணப்பெண் .!

Summary:

நிச்சயதார்த்ததன்று மானங்கெட்ட மாப்பிளையின் மட்டமான செயல், தப்பித்து கொண்ட மணப்பெண் .!

திருமண நிச்சயதார்த்தத்தன்று 4 வயது சிறுமியிடம் மணமகன் தவறான முறையில் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்கள்  மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேஉள்ளது.இதனால் பெற்றோர் தங்களது பிள்ளைகளை வெளியே அனுப்பவே பயப்படும் சூழலும்  உருவாகி வருகிறது.

இந்நிலையில் கோவை வீரகேரளம் பகுதி தென்றல் நகரை சேர்ந்தவர்  மணிகண்டன்.இவர் பெயிண்டரான உள்ளார்.  26 வயது நிரம்பிய இவருக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நிச்சயத்திற்கு சற்று நேரத்திற்கு முன்னர் மணிகண்டன் 4 வயது சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.இதனை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் இது குறித்து வடவள்ளி போலீசாரிடம் புகார் செய்துள்ளனர் .

பின்னர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடனடியாக மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதனால் மணிகண்டனுக்கு நடைபெற இருந்த நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement