தமிழகம்

அட பாவி மனுஷனுங்களா... 10 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று 4 கயவர்கள் செய்த கொடூரச்செயல்.!

Summary:

10 வயது சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள

10 வயது சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது.   

இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் சிறுமியை, இரண்டு வாரங்களுக்கு முன்பு 4 பேர் காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையறிந்த அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக சிறுமி அளித்த தகவலின்படி காட்டுப்பையூரைச் சேர்ந்த பார்த்திபன்(25), பிரபா(27), கோபி(26), அருள்(24) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நான்கு போரையும் தேடி வந்தனர். இடந்தநிலையில் போலீசார் நேற்று, பார்த்திபனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பிரபா, கோபி, அருள் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Advertisement