சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை தூய்மை பணியாளர்களுக்கு சுண்டல் வாங்க கொடுத்த சிறுவன்..! சிறுவனின் செயலை பாராட்டிய பொதுமக்கள்.!
சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்துவைத்திருந்த பணத்தை கொரோனா தடுப்பு பணியில் போராடும் தூய்மை பணியாளர்கள் நலனுக்கா வழங்கிய மூன்றாம் வகுப்பு மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் என பலரும் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்து உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மணிவண்ணன் என்பவரின் மகன் ஜெயஸ்ரீவர்மன் என்ற சிறுவன் செய்துள்ள காரியம் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுவருகிறது.
சைக்கிள் வாங்குவதற்காக தான் உண்டியலில் சேமித்துவைத்திருந்த பணத்தை தூய்மை பணியளர்கள் நலனுக்காக தரவேண்டும் என தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். இதனால் மகிழ்ச்சி அடைந்த பெற்றோர் மகனை அந்த பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளன்னர்.
அங்கு பணியில் இருந்த செயல் அலுவலர் குகன் என்பவரிடம் தான் சேமித்துவைருந்த ரூபாய் . 4856 பணத்தை சிறுவன் அதிகாரியிடம் ஒப்படைத்தான். சிறுவனின் செயலை பாராட்டிய அதிகாரி, அந்த பகுதியில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு மாலையில் சுண்டல் வாங்கி தர பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.