டாஸ்மாக் அருகே கேட்பாரின்றி கிடந்த பணக்கட்டுகள்..!!

திருச்சியில் உள்ள தென்னூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு கேட்பார் இன்றி இரண்டு பண கட்டுகள் கிடந்தன.
அப்போது, அவ்வழியாக சென்று கொண்டிருந்த தில்லை நகர் முத்துக்குமார் என்பவர் அந்த பண கட்டுகளை எடுத்து தில்லை நகர் காவல்துறை அதிகாரி மோகனிடம் ஒப்படைத்துள்ளார்.
அதன்பின், அந்த கட்டுகளைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ரூ 32,000 ரொக்கம் இருந்தது. பணத்தை தவறவிட்டவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரோட்டில் கிடந்த பணக்கட்டுகளை ஒப்படைத்த வாலிபரை போலீசார் பாராட்டினர்.