
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் கணவன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே உள்ள மேல்நிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன். இவரின் மனைவி பெயர் அந்தரி. இந்த தம்பதிக்கு சொந்தமான வீட்டிற்கு எதிரே உள்ள இடத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன்களான வேலுச்சாமி, மற்றும் ராஜாஆகியோர் முள்வேலி அமைத்துள்ளனர்.
இந்தநிலையில் பஞ்சநாதனின் மனைவி அந்தரி அங்கு சென்று ஏன் இங்கே முள் வேலி அமைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ராஜா, வேலுச்சாமி ஆகிய இருவரும் சேர்ந்து அந்தரியை கம்பால் தாக்கியுள்ளனர். தடுக்கவந்த பஞ்சநாதனையும் கன்னத்தில் அறைந்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து பஞ்சநாதனின் மனைவி அந்தரி கே. புதுப்பட்டி காவல் நிலையத்தில் வேலுச்சாமி, ராஜா மற்றும் ராஜாவின் மகன் சேகர் ஆகிய மூவர் மீது புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கே.புதுப்பட்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement