13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
Big Breaking: அடுத்த 2 மணிநேரத்தில் 26 மாவட்டங்களில் பொலந்துகட்டப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
காற்றழுத்ததாழ்வு பகுதியின் காரணமாக வடதமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்ததாழ்வு பகுதியின் காரணமாக வடதமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்து வடமேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், 26 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 2 மணிநேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாவும் குறிப்பிட்டுள்ளது .
அத்துடன் சென்னையில் அதிகாலையிருந்து கனமழை பெய்து வருவதால் வேலைக்கு செல்வோரும், பள்ளிக்கு செல்வதற்கும் கடினமான சூழ்நிலை நிலவிவருகிறது.சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலாய் இருக்கிறது.