தைலமர காடு..!! தனியாக கிடந்த 23 வயது இளைஞரின் சடலம்.. நெஞ்சை பதறவைக்கும் நெய்வேலி கொலை..

தைலமர காடு..!! தனியாக கிடந்த 23 வயது இளைஞரின் சடலம்.. நெஞ்சை பதறவைக்கும் நெய்வேலி கொலை..


23 years old man murdered near Cudaloor

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே 25 வயது இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 14 பகுதியில் உள்ள தைல மர காட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் இரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக அந்த பகுதி போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், உயிரிழந்த வாலிபர் யார் என போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் நெய்வேலி வட்டம் 21 நாவலர் தெருவை சேர்ந்த வீரமணி மகன் சிவா என்கிற சிவக்குமார் (வயது 23) என்பதும், அந்த இளைஞர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அந்த இளைஞரை யாரோ சிலர் பெரிய ஆயுதங்களால் அடித்து கொலைசெய்துள்ளதாக கூறும் போலீசார், இந்த கொலை ஏன் நடந்தது? முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தனரா? கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.