சரவணா ஸ்டோர்ஸ் துணி கடையில் இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்! காட்டிக்கொடுத்த கேமிரா!
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் யமுனா (வயது 40). இவர் புரைசைவாக்கத்தில் உள்ள பிரபல துணி கடையான சரவணா ஸ்டோர்ஸில் துணி ஏட்பதற்காக சென்றுள்ளார். துணிகளை எடுத்துவிட்டு பணம் செலுத்த சென்றபோது யமுனாவின் பர்ஸை காணவில்லை.
உடனே இதுகுறித்து கடை ஊழியர்களிடம் யமுனா புகார் கூறியுள்ளார். கடை மேலாளர் அங்கிருந்த CCTV காட்சிகளை சோதனை செய்ததில் இளம் பெண் ஒருவர் யமுனாவின் பர்ஸை பிட்பாக்கெட் அடித்ததும், மேலும் அந்த இளம் பெண் கடைக்குள் சுற்றிவருவதையும் வீடியோவில் பார்த்துள்ளனர்.

உடனே இதுகுறித்து கடை ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க, அங்கு வந்த போலீசார் 22 வயது நிரம்பிய அந்த இளம் பெண்ணை கைது செய்து அவர் யமுனாவிடம் இருந்து திருடிய பணத்தை மீட்டு கொடுத்தனர். மேலும், அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.