ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
அடக்கொடுமையே... உடல் எடையை குறைக்க மருந்து உட்கொண்ட 20 வயது வாலிபர் உயிரிழப்பு...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் பாளையம் என்பவரின் மகன் சூர்யா(20). இவர் தனியார் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சூர்யாவின் உடல் எடையை குறைக்க தனியார் நிறுவனம் ஒன்றை நாடியுள்ளார்.
அங்கு சூர்யாவுக்கு உடல் எடை குறைய மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை வாங்கி தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்துள்ளார். சாப்பிட்ட சில நாளிலேயே சூர்யாவின் உடல் எடை குறைந்துள்ளது. ஆனால் கடந்த 1 ஆம் தேதி சூர்யாவின் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டு உடல் நிலை மோசமாகி உள்ளது.

அதனையடுத்து சூர்யாவின் பெற்றோர் சூர்யாவை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.